Tuesday, February 20, 2018

திருவள்ளுவரும் வேதங்களும் - பார்ப்பனர்களும்

தமிழில் இலக்கணம் செய்த தொல்காப்பியரும், திருவள்ளுவரும் பார்ப்பனர்களே என்பது தமிழ் பாரம்பரிய வரலாறு. வள்ளுவரை - பஞ்சாங்கம் செய்யும் வள்ளுவர் சாதி எனச் சொல்வோரும் உண்டு.

                                   திருவள்ளுவரின் 14ம் நூற்றாண்டு சிலை
தமிழர்களின் மூத்த தொல்குடி அந்தணர்கள் அல்லது பார்ப்பனர்கள் என மிகத் தெளிவாய் சிலப்பதிகாரம் கூறுகிறது.
 பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற்
காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து  சிலம்பு 7. வரந்தரு காதை

திருக்குறளில் வள்ளுவர் வேதங்களையும், பார்ப்பனர்களையும் போற்றியே குறளில் கூறி உள்ளார்.
                                              

திருவள்ளுவர் வேதத்தை நேரடியாக 3 குறட்பாக்களில் கூறுகிறார்
ஒரு அரசன் நல்லாட்சியை கூறும் அதிகாரம் -செங்கோன்மை
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                              (543-செங்கோன்மை)
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.
   
“கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை;
வடமொழி வாசகம் செய்த நல்லேடு

கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என.....” (அடைக்கலக் காதை)
வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்.-சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை
மோசமான ஆட்சியினால் வரும் கேடு  கொடுங்கோன்மை
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
 நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால்  தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.
தமிழ் பகைவர்களான கிறிஸ்துவ பாதிர்கள், மற்றும் அவரோடு பொருள் பெற்று துணை நின்ற திராவிட அரசியல்வாதிகளின் விஷபோதனையாலும் பல உரைகள் பிதற்றலாய் எழுதப்பட்டுள்ளன, அதில் அறு தொழிலார் என்பதை ஆறு தொழில் என மட்டுமின்றி நூல் என்பதைக் கொண்டு நெசவு, அறுக்கும் நூல் என்றெல்லாம் வள்ளுவரையும், தமிழர் மெய்யியலையும் பழித்து உரைகள் வந்துள்ளன.

நாம் அறுதொழிலோர் எனில் சங்க இலக்கிய நடைமுறையில் காண்போம்.

பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.


 ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6
 ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்”                      – பதிற்றுப்பத்து 24)
 கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்   (பதிற்றுப்பத்து  பாட்டு - 74
 அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் புறம்  -126-11
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு புறம் 361/4,5
அறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று - ஐங் 387/2

நல்ல அரசன் அந்தணர்களின் வேத அற நூல்களை உறுதுணையாய் ஆட்சி செய்ய வேண்டும், அரசன் மோசமான ஆட்சி செய்தால் அந்தணர் வேதம் மறப்பர் என வள்ளுவர் அந்தணர்களையும் வேதங்களையும் போற்றி கூறுகிறார்.

வள்ளுவர் பார்ப்பனர் வேதம் ஓதுதலை மறந்தாலும் குடி பிறப்பால் உள்ள ஒழுக்கம் பேண வேண்டும் என்கிறார்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (-134 ஒழுக்கமுடைமை)
 பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

 ஓத்து - பார்ப்பான், அந்தணர் என்பது சங்க இலக்கிய முறையில்  வேதம்  பிராமணர்ளை தான் குறிக்கிறது.
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5
ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை  - சிலப்பதிகாரம் 15-70
ஓத்துஉடை அந்தணர்க்கு மணிமேகலை 13-25
ஓத்து இலாப் பார்ப்பான் உரை      இன்னா நாற்பது 21

வள்ளுவர் குறளின் அந்தணர் எனும் சொல்லை மேலும் இரண்டு குறளில் கூறி உள்ளார்.
 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.                                   (8-கடவுள் வாழ்த்து)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.                   (30-நீத்தார் பெருமை)
இதில் "அந்தணர் என்போர் அறவோர்" எனும் குறளை தமிழ் மெய்யியல் பகைவர்கள் திரித்து வள்ளுவர் கூறியதை விட்டு கூறாததை சொன்னதாய் கேவலமாய் பயன்படுத்துவர்
நீத்தார் பெருமை - அதிகாரத்தில்; அந்தணர் என்பதை   துறவி எனும் பொருளில் வள்ளுவர்  ஆண்டுள்ளதை,  அந்தணர் குல மரபை  ஏற்க வில்லை என தமிழர் மரபை மீறி பொருள் கூறுவர்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தால் தான் பிறப்பு கடலைக் கடக்க இயலும் என உள்ளதை - எந்த தமிழ் அறிஞரும் சுட்டுவதே இல்லை; கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் எனும் சொல் அந்தணர் கடவுளைக் குறிக்கும், 
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,

                ..............அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்  - பரிபாடல் 5ல் -இவை முறையே பிரம்மாவையும், சிவ பெருமானையும் குறிக்கும்
 திருவள்ளுவர் தமிழர் மெய்யியல் மரபில் அந்தணர் என்பதை கடவுள் என கடவுள் வாழ்த்து  அதிகாரத்திலும், நீத்தார் பெருமை  துறவியர் அதிகாரத்திலும் என பயன்படுத்தி உள்ளதை சரியாய் சொல்ல வேண்டும்

திருவள்ளுவர் வேததை பார்ப்பான் ஓத்து, அறுதொழிலார் நூல் எனச் சொன்னது போலவே மறை எனவும் பயன் படுத்தி உள்ளார்.

 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.                  (28-நீத்தார் பெருமை)

தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.

வடமொழி வேதங்கள் முனிவர்களால் இயற்கையிலிருந்து கேட்டு பெற்றவை, இப்பொருளிலேயே ஸ்ருதி என அழைக்கப்படும்.
வேதங்களிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் எழுந்த பாணினியின் இலக்கண வரைமுறையினுள் வாராதமையால் எழுத்தில் வடிக்க மாட்டார்கள், குரு மூலமாய் ஒத்து கூற ஓதிக் கொள்வதால் ஓத்து. எழுதாமையால் மறை, எழுதாக் கற்பு எனும் பெயரில் சங்க இலக்கியத்தில் காணலாம்.

படிவ வுண்டிப் பார்ப்பன மகனே 5
எழுதாக் கற்பினின் சொல்லுள்ளும் குறுந்தொகை 156

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழி தானே மந்திரம் என்ப.   தொல்காப்பியம்-செய் 480

 மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,  திருமுருகாற்றுப்படை2.

 பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.    தொல் -பொருள-கற் 4
ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும் - தொல்  பொருள். கற்:5/29

24 comments:

  1. இப்படி சங்ககாலத்திலேயே பார்ப்பனரை புலவர்கள் போற்றியதால் - அவர்கள் பலரும் பார்ப்ப்னர்கள்; அல்லது இளங்கோவைப்போல பார்ப்பன ஆதரவாளர்கள் - இன்று பார்ப்பதைப்போல - பார்ப்பனர்கள் மீது பாமர மக்கள் வெறுப்பு கொண்டு வாழ்ந்தனர். நம் காலத்தில் பெரியார் உருவாக காரணமானது. பார்ப்பானும் மற்ற மக்களும் ஒன்று என்று புலவர்கள் உணராததால் சங்க இலக்கிய கருத்துக்களே சமநீதிக்கு எதிரானது. இனியாவது அவர்கள் செய்த தவறைப் பார்ப்ப்னர்கள் உணர்ந்து நிராகரித்து, மற்ற தமிழ்மக்களோடு தங்களை இணைத்துக்கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  2. தமிழரின் மூத்த தொல்குடியினரான பார்ப்பனர்கள் மீது மக்கள் மிகுந்த அன்போடு தான் உள்ளனர்.
    கிறிஸ்துவ ஆங்கிலேயர் வருமுன் உலகின் பணக்கார நாடு இந்தியா, பரவலாய் கல்வி இருந்தது அனைவரும் படித்தனர். ஆனால் குமாஸ்தா கல்வி தேவையில்லை என ஒதுங்கியதும், அளவிற்கு அதிகமான வரிகளாலும் கல்வி எல்லை சுருங்கியது.
    கிறிஸ்துவ ஆங்கிலேயர் 10 கோடி இந்தியரை செயற்கை பஞ்சங்கல்ளால் கொலை செய்தனர், 500 லட்சம் கோடி கொள்ளை அடித்து சென்றதன் விளைவும் உண்டு.
    போலியான கடவுளற்ற கிறிஸ்துவம் பரப்ப பரப்பட்ட பொய் பார்ப்பனர் ஆரியர். ஈ.வெ.ராமசாமி போன்ற கயவர்களை என்றுமே மக்கள் ஏற்கவில்லை.

    ReplyDelete
  3. திருக்குறள் ஆரிய சாத்திர நூற்களின் வழிநூலா? ஆய்வுத் தொடர்-1
    https://www.yarl.com/forum3/topic/212772-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-1/
    தமிழ்நாடு ஆரியநாடே என்பது உண்மையா - குறள் ஆய்வு-2
    https://www.yarl.com/forum3/topic/213020-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2/
    குறள் கூறும் 'அறவாழி அந்தணன்' ஆரியப்பிராமணரா? - குறள் ஆய்வு-3.
    https://www.yarl.com/forum3/topic/213455-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3/
    திருக்குறள் நால்வருண சாதிமுறையைப் பின்பற்றிய நூலா? - குறள் ஆய்வு-4(பகுதி1)
    https://www.yarl.com/forum3/topic/213703-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-4%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF1/
    திருக்குறள் நால்வருண சாதிமுறையைப் பின்பற்றிய நூலா? - குறள் ஆய்வு-4(பகுதி2).
    https://www.yarl.com/forum3/topic/213762-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-4%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF2/

    ReplyDelete
    Replies
    1. கட்டுரைகள் முழுவதும் ஒரு கிறிஸ்துவ காலனியர் பரப்பிய நச்சுப் பொய்களை நம்பி ஒரு பொய்யை மெய்யாக்க செய்யப்பட்ட உளறல்கள்.
      அந்தணர்கள் தமிழ்ன் மூத்த தொல்குடி என்பதையும் வள்ளுவர் கூறுவது என்ன என்பதையும் விளக்கப் பட்டுள்ளது, அந்த உளறல்களுக்கு இங்கிருந்து பதில் கொடுங்களேன்.
      பேராசிரியர் ந. கிருஷ்ணன் கட்டுரை வெற்று பொய், அர்த்தமற்றவை

      Delete
  4. கட்டுரைகள் முழுவதும் ஒரு கிறிஸ்துவ காலனியர் பரப்பிய நச்சுப் பொய்களை நம்பி ஒரு பொய்யை மெய்யாக்க செய்யப்பட்ட உளறல்கள்.
    அந்தணர்கள் தமிழ்ன் மூத்த தொல்குடி என்பதையும் வள்ளுவர் கூறுவது என்ன என்பதையும் விளக்கப் பட்டுள்ளது, அந்த உளறல்களுக்கு இங்கிருந்து பதில் கொடுங்களேன்.
    பேராசிரியர் ந. கிருஷ்ணன் கட்டுரை வெற்று பொய், அர்த்தமற்றவை

    ReplyDelete
  5. அந்தணர், அரசர், வணிகர்& வேளார்-இது தமிழ் சமூக நிலைகள். அந்தணர்களை மனுஸ்மிரிதி சட்டம் வாயிலாக பிராமணர்கள் என்றாக்கி அவர்கள் ஊரை ஏய்க்க வழி செய்த மனுஸ்மிரிதி சட்டம் மிக கொடிய விஷம்! வைணவ சனாதன முறை சமூக சீரழிவுக்கு வித்து!! மனுஸ்மிரிதி சட்டம் சொல்லும் பிராமணர்கள் அற வழியில் நடக்காது பிறரை ஏய்க்க உரிமை கொடுத்த சமூக சீரழிவை சமூக சோகம்! இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்!

    ReplyDelete
    Replies
    1. வள்ளுவர் சொல்கிறார்.


      குறள் - 1103 இல் 'தாமரைக் கண்ணான் ' என யார் சொல்லிறார் ?
      இந்த தாமரை கண்ணன் எந்த கடவுள் ?

      குறள் - 610 இல் 'அடியளந்தான்' என யாரை சொல்கிறார் ?
      இந்த தன அடியினால் (காலால்) உலகை அளந்த இந்த தெய்வம் யார் ?

      'அழல்போலும்மாலைக்குத் தூதாகி ஆயன்
      குழல்போலும் கொல்லும் படை'

      இந்த பாடலில் கூறும் ஆயர்பாடியிலுள்ள ஆயன் என்கிற இடை சிறுவர் யார் ?

      குறள்- 617 இல் 'தாமரையி னாள்.' என்கிற பெண் யார் ?

      எந்த கடவுள் தாமரையில் அமர்த்துள்ளர் ? யார் ?

      குறள் 25 - 'இந்திரனே சாலுங் கரி' என்கிற இந்த இந்திரன் என்கிற கடவுள் யார் ?

      இதற்கெல்லாம் அர்த்தம் தெரியவில்லையெனில் போய் நல்ல தமிழ் வாத்தியாரிடம் கேளுங்கள் !

      அதன்பின் வாருங்கள் !

      Delete
  6. பார்ப்பனர் என்பது தமிழ் சாதி மற்றும் உங்கள் திராவிட ஆரிய பிராமின ------ தமிழரிடம் வேகாது

    ReplyDelete
    Replies
    1. மேலே தெளிவாக விளக்கங்கள் உள்ளபோதும் இப்படி உங்களை போல் முட்டாள்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

      Delete
    2. வள்ளுவர் சொல்கிறார்.


      குறள் - 1103 இல் 'தாமரைக் கண்ணான் ' என யார் சொல்லிறார் ?
      இந்த தாமரை கண்ணன் எந்த கடவுள் ?

      குறள் - 610 இல் 'அடியளந்தான்' என யாரை சொல்கிறார் ?
      இந்த தன அடியினால் (காலால்) உலகை அளந்த இந்த தெய்வம் யார் ?

      'அழல்போலும்மாலைக்குத் தூதாகி ஆயன்
      குழல்போலும் கொல்லும் படை'

      இந்த பாடலில் கூறும் ஆயர்பாடியிலுள்ள ஆயன் என்கிற இடை சிறுவர் யார் ?

      குறள்- 617 இல் 'தாமரையி னாள்.' என்கிற பெண் யார் ?

      எந்த கடவுள் தாமரையில் அமர்த்துள்ளர் ? யார் ?

      குறள் 25 - 'இந்திரனே சாலுங் கரி' என்கிற இந்த இந்திரன் என்கிற கடவுள் யார் ?

      இதற்கெல்லாம் அர்த்தம் தெரியவில்லையெனில் போய் நல்ல தமிழ் வாத்தியாரிடம் கேளுங்கள் !

      அதன்பின் வாருங்கள் !

      Delete
    3. யாரை சொல்கிறார் என்பது முக்கியமில்லை என்ன சொல்கிறார் என்பது முக்கியம் இந்திரனை போல் இருக்காதே என்றால் இந்திரனை அவமானபடுத்துகிறார் என்னுடைய காதலியினுடைய தோளை விட பெருமாளின் சொர்க்கம் கீழானது என்றால் பெருமாளை அவமானபடுத்துகிறார் என்று அர்த்தம் இது கூட புரியவில்லையா

      Delete
  7. திருவள்ளுவர் கூறும் வேத கடவுள்கள் !


    சங்க தமிழ் நூல்களான புறநானூறு, அகநானூறு, பத்து பாட்டு, சிலப்பதிகாரம்,... இப்படி எல்லா நூல்களிலும் வேத கலாச்சாரமும், வேத இறைவனான விஷ்ணுவை தான் புகழ்கிறது.

    இது போலவே தான், திருவள்ளுவரும் தனது நூலான திருக்குறளில் பகவான் விஷ்ணு /கிருஷ்ணர், லட்சுமி (திருமகள்), யமன், இந்திரன், பிரம்மா ஆகிய வேத கடவுள்களை தனது நூலில் குறிப்புடுகிறார் !

    திருமால் (விஷ்ணு ) பற்றி வள்ளுவர்:


    அடி அளந்தான் – திருமாலின் (த்ரி விக்ரம) வாமனாவதாரம் (610)

    அமிழ்து- பாற்கடலை கடைந்தபோது வந்த அம்ருதம் 64, 1106, 720, 82 (சாவா மருந்து)



    1 . குறள் 1103 - இன்பத்துப் பால் - அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல்


    தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
    தாமரைக் கண்ணான் உலகு?
    -
    பொருள்: 'தாமரை கண்ணணுடைய உலகம் தான் விரும்பும் காதலியின் தோள்களில் துயிலும் துயிலை விட இனிமையானதோ'

    அவர் வேறு எந்த தேவரையும் தேவ உலகத்தையும் வள்ளுவர் குறிப்பிடவில்லை.

    எல்லோரையும்விட உயர்தவரான தாமரை கண்களையுடைய கிருஷ்ணரே ஆதிபகவான் என்பதை மனதில் வைத்துக் கொண்டே வள்ளுவர் இந்த குறளை படைத்திருக்கிறார்.


    2. குறள் 610 - பொருட்பால் - அதிகாரம்: மடியின்மை


    மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தா அய தெல்லாம் ஒருங்கு


    மடி இன்மை அதாவது சோம்பலில்லாமை பற்றி பாடவந்த வள்ளுவர், மஹா விஷ்ணு வாமனனாக வந்து பின்னர் நெடு நெடுவென வளர்ந்து த்ரிவிக்ரமனாக வின்னையும் மண்ணையும் தன் திருவடிகளால் அளந்தது போல சோம்பல் இல்லாத மன்னவன் இந்த உலகம் முழுவதையும் அடைவான் என்கிறார்.


    3. பகவான் கண்ணனை பற்றி கூறுகிறார்...


    அழல்போலும்மாலைக்குத் தூதாகி ஆயன்
    குழல்போலும் கொல்லும் படை


    பகவான் கண்ணனை பற்றி கூறுகிறார்...

    தவைவனுக்காக காத்திருக்கும் தலைவி பகற்பொழுதுப்போய் மாலைப்பொழுது வந்ததன் அடையாளமாக சொல்லுவது யசோதை இளஞ்சிங்கம் கண்ணன் மாடுமேய்க்கும் போது ஊதும்புல்லாங்குழலைத்தான். இங்கே கண்ணனே தலைவன் ராதை முதலிய கோபிகைகளே தலைவிகள். மாலைப்பொழுது வந்துவிட்டது, தூரத்தில் கண்ணன் குழலோசை கேட்கிறது, ஆனால் கண்ணன் இன்னும் இங்கே வரவில்லை. கோபிகைகள் காத்திருக்கிறார்கள் கண்ணனுக்காக.

    ReplyDelete
  8. லக்ஷ்மி பற்றி வள்ளுவர்:

    (குறள் - 617, 179, 519, 920 )

    1. குறள் 617 - பொருட்பால் - அதிகாரம்: ஆள்வினையுடைமை


    மடி உளாள் மாமுகடி என்ப, மடியிலான்
    தாளுளாள் தாமரையி னாள்.


    பொருள்:: “ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்; சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்”.


    2. குறள் 179 - அறத்துப்பால் - அதிகாரம்: வெஃகாமை


    அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்
    திறனறிந் தாங்கே திரு.

    பொருள்:: அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.


    3. குறள் 519 - பொருட்பால் - அதிகாரம்: தெரிந்து வினையாடல்


    வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
    நினைப்பானை நீங்குந் திரு.

    பொருள்: தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீக்குவான்.


    4. குறள் 920 - பொருட்பால் - அதிகாரம்: வரைவில் மகளிர்

    இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
    திருநீக்கப் பட்டார் தொடர்பு.

    பொருள்: உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.


    இந்திரன் பற்றி வள்ளுவர்:


    குறள் 25 - அறத்துப்பால் - அதிகாரம்: நீத்தார் பெருமை

    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி


    பொருள்: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்



    யமன் பற்றி வள்ளுவர்:

    யமன் (கூற்றம்) – 269, 1085, 326, 765, 1083


    குறள் 269 - அறத்துப்பால் - அதிகாரம்: தவம்


    கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
    ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

    பொருள்: தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்



    பிரம்மா பற்றி வள்ளுவர்:

    பிரம்மா – உலகு இயற்றியான் 1062


    குறள் 1062 - பொருட்பால் - அதிகாரம்: இரவச்சம்


    இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
    கெடுக உலகியற்றி யான்.

    பொருள்: உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.



    எனவே, திருவள்ளுவர் கூறும் பகவான் விஷ்ணு / கிருஷ்ணரே என்பதை இதன் மூலம் அறியலாம். மேலேம், இவர் தனது திருக்குறளில் வேத கடவுள்களை மட்டுமே தான் சொல்கிறார் !

    ReplyDelete
  9. பிராமணர்கள் சனாதனத்தின் பிற்பற்றி வந்தவர்கள்.

    பார்ப்பணர்கள், அந்தணர்கள் என்பது தமிழ் மரபில் வந்த தொல்பழங்குடி குருக்கள். இன்று பிராமணியம் இவர்களை பிராமணியாக்கியிருக்கின்றது. சங்கறுக்கும் பார்ப்பான் என்றால் கடலுக்கும் பிராமணணுக்கும் என்ன தொடர்பு உண்டு? ஐயன் வள்ளுவரை எவ்வாறு மரபணுச் சோதனை செய்து பிராமணன் அல்லது பறையன் என்கின்றார்கள்?

    சித்தர்கள்- ஆசீவகத்தின் அறிவியலை அறிந்து கொள்ளவே வள்ளுவர் வலியுறுத்துகின்றார். பிராமணனை அல்ல. யாம் யாருக்கும் குடியல்லோம். எனவே பிராமணனன் சொல்வதை கேட்க வேண்டிய தேவை நமக்கு இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆசீவகம் என ஒரு கட்டுக்கதை மதம் இருந்தமைக்கு சான்றே கிடையாது, வெறும் குப்பை பொய்களால் சர்ச் அடிமைகளால் செய்யப்படும்
      நச்சுகள்

      Delete
    2. உலக மகா காமெடி பீசுகள் பார்ப்பனர் வேறு, பிராமணர் வேறுண்ணு சொல்லிட்டு திரியுதுங்க. டேய் வெண்ணைகளா மேல சொல்லப்பட்ட எல்லா seyyut பாக்களிலும் நான்கு வேதங்களைக் ஓதும் பார்ப்பனர், அந்தணர் பற்றி தான் வருகிறது. அந்தத் 4 வேதங்கள் தான் மறை மொழி என்று கூறப்படுகிறது. அந்த மறை மொழியை ஓதியது தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் என்றால் வடநாட்டில் பிராமணர்கள். பிரம்மத்தை தேடுபவன் பிராமணன். அந்தத்தை அணாவுபவன் அந்தணன். பாரை அறிய முயல்பவன் பார்ப்பனன். எல்லாமே ஒன்று தான். நாங்கள் தமிழ் பார்ப்பனர்கள். பெங்காலி பிராமணர்கள் அல்ல. சட்டர்ஜி, ஷர்மா ஜி அல்ல. நாங்கள் ஐயர், அய்யங்கார்கள்... திருவாய் மொழியை விட சிறந்த தமிழ் பதிகங்கள் எவ்விடம் காண முடியும்? உங்க மொழி அரசியலுக்கு எங்களை பலியாக்காதீர்கள். ஆரிய பிராமணர் வேறு. நாங்கள் தமிழ் பார்ப்பனர். ஆனால் பாரதம் முழுக்க பிராமணர்களுக்கு ஆறு தொழில்கள் தான் கட்டாயமாக விதிக்கப் பட்டிருந்தன. வேதம் ஓதுதல், வேள்வி செய்தல், வேள்வி செய்வித்தல், தானம் அளித்தல், தானம் பெறுதல், மன அடக்கம் ஆகியவை ஆகும். இவை தவிர புலனடக்கம், பற்றின்மை, செல்வத்தை விரும்பாமை, பிரம்மத்தை உணர்தல் போன்றவை பிராமணனின் பிறப்பொழுக்கமாக இருக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்தார்கள்.

      ஆயினும் பிராமணர்கள் கூறும் அறம் சிறந்ததாயினும் அதையும் மேலாக மன்னனின் செங்கோலே நாட்டை ஆள வேண்டும் என்று தான் திருக்குறள் சொல்கிறது. அறம் நூற்கும் அந்தனர்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்... என்கிறது. இன்றைக்கு நீங்கள் சொல்லும் வடமொழி தமிழ் மொழி அரசியல் சரியான நகைச்சுவை விருந்து.

      Delete
  10. சமணம், பௌத்தம், ஆசிவகக் கற்பனைகள் உலகைப் படைத்த இறைவனை ஏற்பதில்லை, இறைவன் திருவடியைப் பற்றினால் மட்டுமே மோட்சம் என்பதை ஏற்காதவர்களை பேய் என்பார் வள்ளுவர்
    உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
    அலகையா வைக்கப் படும். - குறள்

    பொருள்: உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.

    ReplyDelete
  11. பௌத்த, ஜைன, வைதீக மதங்களைப் போலவே, இந்த ஆசீவக மதமும் வட இந்தியாவில் தோன்றியது. இந்த மதத்தை உண்டாக்கினவர் மஸ்கரிபுத்திரர் என்பவர். பாளிமொழியில் இப்பெயர் மக்கலிபுத்த என்று வழங்கப்படுகின்றது. மாட்டுத் தொழுவம் என்று பொருள்படும் 'கோசால' என்னும் அடைமொழி கொடுத்துக் கோசால மக்கலிபுத்த என்றும் இவர் வழங்கப்படுவர். ஏனென்றால், இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகின்றது. தமிழ் நூல்கள் இவரை மற்கலி என்று கூறும்.
    http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=218&pno=
    ஆசிவக மதம் வட நாட்டு மதமாமே hhaha

    ReplyDelete
    Replies
    1. What proof you have for ஆசீவக மதம், but for 20th century frauds mis reading old texts

      Delete
  12. பொய் சொல்லுவதில் உங்களை மிஞ்ச ஆளே கிடையாது அந்தணர் என்ற சொல் பார்ப்பனரை ஒரு காலும் குறிக்காது. ஐயர் என்ற சொல்லே பிராமணருக்கு உரிய சொல் அல்ல அன்று கார்டுவெல்லையே கார்டுவெல் ஐயர் போப்பைய்யர் என்பார்கள் அந்தணர் என்ற சொல் அரசர் அந்தணர், வணிகர் வேளாளர் என்று தொல்காப்பியம் வேளாளர் என்பவர்கள் வேளாள ஜாதி அல்ல உற்பத்தி செய்பவர் அது போல அந்தணர் என்பவர் சான்றோர் என்று தானே அர்த்தம் தவிர பிராமணர் அல்ல அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலார் என்று கூறுகிறார் அப்படியானால் காஞ்சி சங்கர ராமன் கொலை வழக்கில் சிறை சென்ற அக்யூஸ்ட் ஜெயேந்திரனும் விஜயேந்திரனும் அந்தணரா கிடையாது அவர்கள் பார்ப்பனர்கள் எனவே அந்தணர் என்ற சொல் சான்றோரை குறிக்கும் பார்ப்பான் என்ற சொல் மட்டுமே பிராமணரை குறிக்கும். அதனால் பார்ப்பனர்கள் ஒழுக்கமாக இல்லை என்று எந்த ஜாதியையும் குறிப்பிடாத வள்ளுவர் வேதம் அவ்வளவு ஒன்றும் புனிதமானது இல்லை அதை மறந்து போனாலும் படித்துக் கொள்ளலாம் அதைவிட உங்களுக்கு ஒழுக்கம் முக்கியம் என்று மறப்பீனும் ஒத்துக்கொளலாகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்க குன்றக்கெடும் என்று சொல்லியிருக்கிறார்.
    பேர்கொண்ட பார்ப்பான் பிறான்றன்னை யர்ச்சித்தால்
    போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
    பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாமென்றே
    சீர்கொண்ட நந்தி தெரிந்து ரைத்தானே’ 312 திருமூலர் திருமந்திரம்
    என்று திருமூலர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை பற்றி சொன்னது

    எனவே எல்லா அறிவாளிகளையும் தனதாக்கிக் கொள்ளாதீர்கள் இதை விட வெட்கக்கேடு வேறு ஒன்றும் இல்லை

    ReplyDelete
    Replies
    1. சாரு பிராமணர் வேறு நாங்க வேறு என்கிறீர்கள். நாங்க மட்டும் என்ன ஆரிய பிராமணர்கள் நாங்க என்றா சொல்லுகிறோம்? நாங்க யாராவது சாட்டர்ஜி, சதுர்வேதி, ஷர்மா என்று பேர் உள்ளவர்களா? இல்லை காஷ்மீரி பண்டிட்டுகளா? நாங்க தமிழ் பார்ப்பனர்கள். அரு தொழில் செய்யும் அந்தணர்கள். தமிழர்கள். எங்களை வடனாட்டவர்களாக காட்ட முனைந்து பரிதாபமாக தோர்கிரீர்கள். வள்ளுவர் கூறும் மறை மொழி எது? வள்ளுவர் நான்கு வருண சமூகத்தை குறிப்பிடுகிறார் அல்லவா? அவ்வளவு தான். தீர்ந்தது கதை. தமிழ் நாட்டின் ஆன்மீக வேர் சனாதன சமூகம் தான். முற்றுப்புள்ளி.

      Delete
  13. பரிபாடல்-திரட்டு 2ம் பாடல் வையை என்ற தலைப்பில் தலைவன் கூற்று
    மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித்
    தணிவின்று, வையைப் புனல். 50
    தலைவன் கூற்று
    ‘புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,
    எனலூழ் வகை எய்திற்று’ என்று ஏற்றுக்கொண்ட
    புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,
    நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்,
    கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால், 55
    ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து.
    என ஆங்கு-
    பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம்
    ‘ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு’ எனப்
    பார்ப்பார் ஒழிந்தார், படிவு.
    ‘மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று’ என்று, 60
    அந்தணர் தோயலர், ஆறு.
    ‘வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென’
    ஐயர், வாய்பூசுறார், ஆறு. -பரிபாடல்-திரட்டு 2:50-63
    அந்தணர்கள் எல்லா மக்களும் சேர்ந்து கொண்டாடும் புதுநீர் விழாவின் போது, கேளிக்கைகளில் கலந்துகொள்ளாது ஒதுங்கியே வாழ்ந்தனர். கள் குடித்தவர்கள் உமிழ்கையில் கள்ளும்; பெண்களும் சிறுவர்கள் பயன்படுத்தும் நறுமணப் பொருட்கள், வழுவழுப்பான தேன் முதலியவை வைகை ஆற்றின் புதுப்புனலில் கலந்து வந்தது ஆகையால் ஒழுக்க நெறிப்பட்ட பார்ப்பனர்கள் புதுப் புனலின் போது வைகையில் குளிப்பதோ- வாய் கொப்பளிப்பதோ இல்லை. இங்கே பார்ப்பனர்- அந்தணர்-ஐயர் என்ற மூன்று பதங்களும் பிராமணர்களைக் குறிக்க சங்க காலத்திலே இருந்தது எனத் தெளிவாகிறது.

    ReplyDelete
  14. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல்.
    மு.வரதராசன் விளக்கம்:

    அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.

    சாலமன் பாப்பையா விளக்கம்:

    அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.

    சிவயோகி சிவக்குமார் விளக்கம்:

    முடிவை அறிந்தவர் நூல்களுக்கும் இல்வாழ்விற்கும் மூலமாய் நிற்பது ஆட்சியாளரின் சட்டமே... ippadi unmaiyaana vilakkam irukka neenga thappu thappaa vilakkam solluvadhai yerkka inga muttaalgalin ennaikkai kuraivu.. unga oru vilakkam padikkumpodhe matravatrin latchanam therindhuvidum..

    ReplyDelete
  15. வள்ளுவர் குறளிற்கு பொருள் கொள்ளுபவர்கள் - வள்ளுவத்திற்கு முன்பான சங்க இலக்கியமும் பின்பான சிலப்பதிகாரமும் ஒரு சொல்லை என்ன பொருளில் பயன்படுத்தியதோ அதே பொருளில் தான் வள்ளுவரும் பயன் படுத்துவர்.
    அந்தம் என்றால் இறுதிப் பொருள், பிரம்மம், வேதாந்தம், பிராமணர் எனும் வடமொழியின் தமிழே அந்தணர் என்றால் இறுதிப் பொருள்களை ஆராய்பவர், காலனி ஆதிக்க நச்சு அடிமைகள் உரையே தேவை இல்லை மூல வள்ளுவத்தை தமிழ் பண்பாடு அடிப்படையில் பண்டைய நிறைமொழி அந்தணர் மறைவழி நெறிவழி நிற்றலே தமிழனாகும்

    ReplyDelete